Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கையிலே ஆகாசம்... கொண்டு வந்த நேசம்... மதுரை டூ சென்னை  'பறந்த' மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

கையிலே ஆகாசம்... கொண்டு வந்த நேசம்... மதுரை டூ சென்னை  'பறந்த' மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

கையிலே ஆகாசம்... கொண்டு வந்த நேசம்... மதுரை டூ சென்னை  'பறந்த' மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

கையிலே ஆகாசம்... கொண்டு வந்த நேசம்... மதுரை டூ சென்னை  'பறந்த' மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

UPDATED : ஜூன் 25, 2024 06:46 AMADDED : ஜூன் 25, 2024 06:21 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 10 மாணவர்கள் முதல்முறையாக விமானத்தில் பயணித்து சட்டசபை நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.

மதுரை ரோட்டரி மிட் டவுன் கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு விமான நிலையத்தில் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் வழியனுப்பினர். 8,9ம் வகுப்பு மாணவர்கள் கோபிகா ஸ்ரீ, வர்ஷினி, சுல்தானா ராபிகா, புவனேஸ்வரி, பாண்டிச்செல்வம், சந்தானகுமார், கார்த்திக், ஸ்ரீகுமரன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட பின் அருங்காட்சியகம், மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்தனர்.

அவர்கள் கூறுகையில், விமானத்தில் முதல்முறையாக பயணித்தோம்.

பறவையைபோல் பறப்பதாக இருந்தது. ஜாலியாக இருந்தது. ஏற்பாடு செய்த மேயர், கமிஷனருக்கு நன்றி'' என்றனர்.

வழியனுப்பும் நிகழ்ச்சியில் கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், செயற் பொறியாளர் (குடிநீர்) பாக்கியலட்சுமி, கவுன்சிலர்கள் முத்து லட்சுமி, கருப்பசாமி, ரோட்டரி சங்க தலைவர் சிவசங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us