Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பள்ளி கல்லுாரி செய்திகள்

பள்ளி கல்லுாரி செய்திகள்

பள்ளி கல்லுாரி செய்திகள்

பள்ளி கல்லுாரி செய்திகள்

ADDED : ஜூலை 29, 2024 06:45 AM


Google News
முப்பெரும் விழா

மதுரை இளமனுார் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா தலைமையாசிரியை கனகலட்சுமி தலைமையில் நடந்தது. உதவி தலைமையாசிரியர்கள் சண்முகவேலு முன்னிலை வகித்தார், தேவி வரவேற்றார். 'கல்வி தந்த வள்ளல்' என்ற தலைப்பில் ஆசிரியர் மகேந்திரபாபு பேசினார். பத்தாம் வகுப்பு தமிழில் முதலிடம் பெற்ற மாணவி ஐஸ்வர்யா உட்பட அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். ஆசிரியர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

இலக்கிய மன்றம் துவக்கவிழா

மதுரை கூடல்நகர் அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்க விழா என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ராஜ்குமார், துரை விஜயபாண்டியன் தலைமையில் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் கார்த்திக் பேசினர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவி கார்த்திகை பிரியா, அஸ்விதா, தீபிகா, ஸாலிகா, காமராஜர் பேச்சு போட்டிகளில் முதலிடம் பெற்ற ஸ்ரீமதிக்கு பரிசு வழங்கினர். பள்ளித் திட்ட அலுவலர் நீதிமணி வரவேற்றார். பட்டிமன்றம், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தலைமையாசிரியர் ஹெப்சி ஆண்டனி மஸ்கரின் நன்றி கூறினார்.

முன்னாள் மாணவிகள் சந்திப்பு

மதுரை பாத்திமா கல்லுாரியில் 1996 - 1999 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவிகள் சந்திப்பு 25 ஆண்டுகளுக்குப் பின் கல்லுாரி இக்னேஷியஸ் மேரி, முதல்வர் செலின் சகாயமேரி தலைமையில் நடந்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகளுக்கு பண உதவி செய்வது உள்ளிட்ட பணிகள் குறித்து முன்னாள் மாணவியர் கூட்டமைப்பு தலைவர் ராகம் பேசினார். ஆசிரியர்கள் சிறப்பிக்கப்பட்டனர். முன்னாள் மாணவிகள் செல்வமீனா, சுதா, ஜீன், வித்யா, கமலா ஒருங்கிணைத்தனர். மாணவிகள் கல்லுாரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

மாணவர்களிடம் கலந்துரையாடல்

மதுரை மாநகராட்சி மாசாத்தியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில், சிறப்பு குழந்தைகளிடம் சி.இ.ஓ., கார்த்திகா கலந்துரையாடினார். இப்பள்ளியில் மாணவர்கள் கல்வித்தரம், தேர்ச்சி விகிதம், அரசு திட்டங்கள் வழங்கப்பட்ட விவரம் குறித்து ஆய்வு செய்தார். குடிநீர், கழிப்பறை வசதிகள் குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்தார். அரசு செயல்படுத்தும் நான் முதல்வன் திட்டம் குறித்து விளக்கினார். தலைமையாசிரியர் (பொறுப்பு) சின்னதுரை, உதவி தலைமையாசிரியர் முருகன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us