சேர்க்கை விழா கொண்டாட்டம்
மதுரை: எல்.கே.பி.,நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கு வந்த மாணவர்களை பறை இசைத்து, சிலம்பம் சுழற்றி, இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர். பல்வேறு சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள் பானு, ஆசிரியர்கள் விஜயலட்சுமி, அனுசியா, மனோன்மணி, சித்ரா, தமிழ்ச்செல்வி, அகிலா அம்பிகா, சுகுமாறன், அருவகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆதார் முகாம் துவக்கம்
கொட்டாம்பட்டி: அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதார் முகாம் நடந்தது. ஆசிரியர் தாரணி தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். முகாமில் மாணவர்களுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்யப்பட்டன. ஏற்கனவே எடுத்த மாணவர்களுக்கு தவறுகள் திருத்தம் செய்யப்பட்டது.
மாணவர்களுக்கு பரிசு
திருமங்கலம்: மேல, கீழ உரப்பனுார், ஊராண்ட உரப்பனுார் துவக்கப் பள்ளிகளில் நேற்று பள்ளிக்கு வந்த 120க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தண்ணீர் பாட்டில், பேனா, பென்சில், ஸ்கெட்ச் உள்ளிட்ட பொருட்களை ஊராட்சி தலைவர் யசோதை, மகன் சாமிநாதன் சொந்த செலவில் பரிசாக வழங்கினர். மாணவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மாணவர்கள் உற்சாகம்
திருமங்கலம்: அரசு பெண்கள் பள்ளியில் 6ம் வகுப்பில் புதியதாக 170 மாணவிகளும், 11ம் வகுப்பில் 418 மாணவியரும் சேர்ந்தனர். பள்ளிக்கு வந்த அவர்களை தலைமையாசிரியர் ரோஜா வினோதினி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயராமன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ஸ்ரீதேவி மற்றும் ஆசிரியர்கள் சந்தனம், சாக்லேட், ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.