ADDED : ஜூன் 11, 2024 06:37 AM
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தேர்வாணையர் (பொறுப்பு) தர்மராஜ் ராஜினாமா செய்வதாக பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணனிடம் கடிதம் அளித்துள்ளார்.
இப்பல்கலை நாட்டுப்புறவியல் துறை தலைவரான தர்மராஜ், 2020 நவம்பரில் தேர்வாணையராக கூடுதல் பொறுப்பேற்றார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் நீடித்ததால் விமர்சனம் எழுந்தது. அவர் தேர்வாணையர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக கடிதம் அளித்தார். அதையடுத்து சிண்டிகேட் உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். இரு பதவிகளில் இருக்க கூடாது எனக்கூறி மீண்டும் அவர் ராஜினாமா கடிதம் அளித்தார். கடிதங்களை அப்போதைய துணைவேந்தர் குமார் ஏற்கவில்லை. தற்போது மூன்றாவது முறையாக தர்மராஜ் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். இது பல்கலை பரிசீலனையில் உள்ளது.