ADDED : மார் 12, 2025 01:19 AM
நிறுவனர் ஜெயந்தி விழா
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் 54வது கல்லுாரி நாள் மற்றும் கல்லுாரி நிறுவனர் சுவாமி சித்பவனந்தர் ஜெயந்தி தின விழா நடந்தது. துணை முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார், அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ் பாபு, முன்னாள் முதல்வர் ராமமூர்த்தி, துணை முதல்வர் இளங்கோ, பேராசிரியர்கள் செவ்வேள், ஜெயபாலன் முன்னிலை வகித்தனர். செயலர் சுவாமி விவேகானந்த, குலபதி அத்யாத்மனந்தா, திருச்சி பாரதிதாசன் பல்கலை முதன்மையர் ராமகணேஷ் சுவாமி சித்பவனந்தர் ஜெயந்தி மற்றும் கல்லுாரி நாள் குறித்து பேசினர். துறை தலைவர்கள் (பொறுப்பு) ராமர், குமரேசன் நன்றி கூறினர்.
பண்ணிசைப் பயிலரங்கம்
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் பண்ணிசைப் பயிலரங்கம் நடந்தது. முதல்வர் ராம சுப்பையா தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, உப தலைவர் ஜெயராம், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். தியாகராஜர் கலை கல்லுாரி உதவி பேராசிரியர் எழில் பரமகுரு பேசினார். இசைத்தமிழ் அறிஞர் சுரேஷ்சிவன், திருவண்ணாமலை அரசு இசைப்பள்ளி தேவார ஆசிரியர் சிவப்பிரகாஷ், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் ஓதுவார் பொன் முத்து விநாயகம் பயிற்சி அளித்தனர். பேராசிரியர் ஜோதி முருகன் தொகுத்துரைத்தார். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு தமிழ்த் துறை தலைவர் பரிமளா சான்றிதழ் வழங்கினார். பேராசிரியர் ஜகன்நாத் ஒருங்கிணைத்தார்.
பொருளாதார துறை நிறைவு விழா
மதுரை: அமெரிக்கன் கல்லுாரியில் முதுகலைப் பொருளாதாரத் துறை கழக நிறைவு விழா துறைத் தலைவர் முத்துராஜா தலைமையில் நடந்தது. கஜேந்திரன் வரவேற்றார். மாணவி சண்முக லாவண்யா முதுகலை பொருளாதார ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர் டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் பேசுகையில், ஒரு நாட்டின் வளர்ச்சியை பொருளாதார ரீதியாக மட்டும் பார்க்காமல் சமூக ரீதியாகவும் பார்க்க வேண்டும். சமூக குற்றங்கள், போதைப் பொருட்களால் ஒரு நாட்டின் வளர்ச்சி அதிகமாக தடைபடுகிறது. இந்த நிலை மாற மாணவர்களின் சீரிய ஈடுபாடு பொருளாதாரத்தில் இருக்க வேண்டும்'என்றார். போலீஸ் விஜயதேவி, பேராசிரியர்கள் கண்ணபிரான், ஷீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாணவர் பகத் நன்றி கூறினார்.
ஆண்டு விழா
மதுரை: திருமங்கலம் யூனியன் பாறைப்பட்டி அரசு கள்ளர் தொடக்க பள்ளியில் 87 வது ஆண்டு விழா தலைமையாசிரியர் (பொறுப்பு) பாலமுருகபாண்டியன் தலைமையில் நடந்தது. பள்ளிமேலாண்மை குழு தலைவர் சுதா, உறுப்பினர்கள், பெற்றோர் பங்கேற்றனர். அரசு பள்ளிகளில் படித்தால் கிடைக்கும் நலத்திட்டங்கள், மருத்துவம், பொறியியல் மாணவர்களுக்கான 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. பாப்பாமணி, விருமாயி, காமாயி, தேவி, சுந்தரவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆசிரியை சித்ரா நன்றி கூறினார்.