ADDED : மார் 12, 2025 01:20 AM
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் துணை தாசில்தார் சுவேதா தலைமையில் நடந்தது.
விவசாயிகள் சிவராமன், பாண்டியன், மாரிச்சாமி, சின்னையா, மகேந்திரன் பேசியதாவது: மானாவாரி கண்மாய்களை சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும். தென்கால் கண்மாய் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மாதந்தோறும் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கூட்டத்தில் தோட்டக்கலை, நீர்வளத் துறையினர் மட்டுமே வந்துள்ளனர். அடுத்த கூட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகளும் குறிப்பாக அனைத்து வி.ஏ.ஓ.,க்களும் பங்கேற்க வேண்டும் என்றனர்.
விவசாயி சின்னையா, தோப்பூர் ஊருணியை சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென 6 மாதங்களாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி வெளிநடப்பு செய்தார்.