ADDED : மார் 14, 2025 05:47 AM
மதுரை: மதுரை காந்தி மியூசியம் சார்பில் 95வது உப்பு சத்தியாகிரக யாத்திரை தொடங்கிய நாள் கிடாரிபட்டி லதா மாதவன் கல்லுாரியில் நடந்தது.
ஏற்பாடுகளை தாளாளர் மாதவன், மியூசிய செயலாளர் நந்தாராவ் செய்தனர். முதல்வர் முருகன் தலைமை வகித்தார். காந்தியின் உப்பு சத்தியாகிரக நடைபயணம் குறித்து காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் பேசினார். உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் பிரபாகரன் உட்பட பலர் பேசினர்.