/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் சிக்கிய போலி டிக்கெட் பரிசோதகர் ரயில்வே பாதுகாப்பு படை விசாரணை மதுரையில் சிக்கிய போலி டிக்கெட் பரிசோதகர் ரயில்வே பாதுகாப்பு படை விசாரணை
மதுரையில் சிக்கிய போலி டிக்கெட் பரிசோதகர் ரயில்வே பாதுகாப்பு படை விசாரணை
மதுரையில் சிக்கிய போலி டிக்கெட் பரிசோதகர் ரயில்வே பாதுகாப்பு படை விசாரணை
மதுரையில் சிக்கிய போலி டிக்கெட் பரிசோதகர் ரயில்வே பாதுகாப்பு படை விசாரணை
ADDED : ஜூன் 19, 2024 04:50 AM

மதுரை: அந்தியோத்யா ரயிலில் டிக்கெட் பரிசோதகராக இருப்பது போல நடித்த கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன், 30, சிக்கினார். அவரிடம் ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரிக்கின்றனர்.
தாம்பரம்-- நாகர்கோவில் இடையே இந்த விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் திருச்சி -- திண்டுக்கல் இடையே வந்த போது, முன்பதிவு பெட்டி ஒன்றில் டிக்கெட் பரிசோதகர்(டி.டி.இ.,) போன்ற தோற்றத்தில் ஒருவர் பயணிகளிடம் பரிசோதிக்கும் விதம் அங்குமிங்கும் சென்றார்.
அதே பெட்டியில் மதுரையைச் சேர்ந்த பெண் ரயில் டிக்கெட் பரிசோதகர் குடும்பத்தினருடன் பயணித்துள்ளார்.
அவருக்கு அந்த டிக்கெட் பரிசோதகர் மீது சந்தேகம் எழுந்தது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த விருதுநகர் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு படையினர் விசாரித்த போது மணிகண்டன் முன்னுக்கு பின் முரணாக தெரிவித்ததால் சந்தேகம் எழுந்தது. அடையாள அட்டை உள்ளிட்ட முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லை. டி.டி.இ.,க்கான போலி அடையாள அட்டை வைத்திருந்தார்.
இதற்கிடையில் ரயில் மதுரை ரயில் நிலையத்தை நெருங்கியதால் அவர் மதுரை ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
எஸ்.ஐ., கண்ணன் தலைமையில் பாதுகாப்பு படையினர் விசாரித்தனர்.
அவர் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிந்தது. அவர் எதற்காக டிக்கெட் பரிசோதகர் போன்று செயல்பட்டார் என விசாரணை நடக்கிறது. திண்டுக்கல் அருகே அவர் பிடிக்கப்பட்டதால் அம்மாவட்ட ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.