/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திருச்சி எஸ்.ஆர்.எம்., ஓட்டலுக்கு எதிரான நடவடிக்கைக்கு தடை நீட்டிப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு திருச்சி எஸ்.ஆர்.எம்., ஓட்டலுக்கு எதிரான நடவடிக்கைக்கு தடை நீட்டிப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
திருச்சி எஸ்.ஆர்.எம்., ஓட்டலுக்கு எதிரான நடவடிக்கைக்கு தடை நீட்டிப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
திருச்சி எஸ்.ஆர்.எம்., ஓட்டலுக்கு எதிரான நடவடிக்கைக்கு தடை நீட்டிப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
திருச்சி எஸ்.ஆர்.எம்., ஓட்டலுக்கு எதிரான நடவடிக்கைக்கு தடை நீட்டிப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 19, 2024 04:48 AM
மதுரை : திருச்சியில் குத்தகை நிலத்திலிருந்து எஸ்.ஆர்.எம்., ஓட்டல் நிர்வாகத்தை வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடையை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்சி கொட்டப்பட்டுவில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு (டி.டி.டி.சி.,) சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம்., குழும ஓட்டல் உள்ளது. குத்தகைக் காலம் முடிந்துவிட்டதாகக்கூறி இடத்தை காலி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிராக எஸ்.ஆர்.எம்., ஓட்டல் நிர்வாகம், 'குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள நிலத்திலிருந்து எங்களை வெளியேற்றக்கூடாது என உத்தரவிட வேண்டும்,' என்று உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது.
ஜூன்14 ல் அவசர வழக்காக விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்:
மனுதாரர், டி.டி.டிசி., இடையே குத்தகை ஒப்பந்தம் ஏற்பட்டது. அரசின் உத்தரவு இருந்தால் குத்தகையை புதுப்பிக்கலாம் என ஒப்பந்தத்தில் உள்ளது. புதுப்பிப்பதில் அரசு ஏதேனும் முடிவு எடுத்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டாம் என அரசு முடிவெடுத்துள்ளதாக அதன் தரப்பு தெரிவித்தது. இதில் எந்த உத்தரவையும் இந்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. மனுதாரர் அந்த இடத்தில் ஜூன் 18 வரை தொடரலாம் என இடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.
நேற்று மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பு: மனுதாரர் தரப்பு குத்தகை தொகை ரூ.38 கோடியை செலுத்தவில்லை. குத்தகை ஒப்பந்தம் ஜூன் 13 ல் முடிந்துவிட்டது. இடம் ஜூன் 14 ல் கையகப்படுத்தப்பட்டது.மனுதாரர் தரப்பு: குத்தகை காலத்தை நீட்டிப்பு செய்யக்கோரி அரசிடம் விண்ணப்பித்தோம். காரணம் இன்றி நிராகரித்துவிட்டது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவு இன்று (ஜூன் 19) வரை நீட்டிக்கப்படுகிறது. இன்று இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.