ADDED : ஜூலை 22, 2024 05:17 AM
மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனியில் பிராமண கல்யாண மகால் டிரஸ்ட் சார்பில் நடந்த ராதா கல்யாணம் பாகவத மேளா வைபவம் ஆய்க்குடி குமார் பாகவதர் தலைமையில் நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் சீதாரான், காஞ்சி மடத்தின் மதுரை தலைவர் ராமசுப்பிரமணியன், சிருங்கேரி மடம் மதுரைக் கிளை தர்மாதிகாரி நடேச ராஜா, அம்மா கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ணய்யர், வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், கிருஷ்ணவேணி, பிராமண ஸமாஜ மதுரை கிளைத் தலைவர் ரவி பங்கேற்றனர். மதியம் 12:00 மணிக்கு மாங்கல்ய தாரணம் பின், மகா தீபாராதனையும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸத் ஸங்க ஸ்ரீராமன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். டிரஸ்ட் சேர்மன் சங்கர நாராயணன், செயலாளர் ராஜகோபாலன், பொருளாளர் ஜகன்னாதன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.