Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கள் விற்பனைக்கான தடையை நீக்க வழக்கு விசாரணை மாற்றம்

கள் விற்பனைக்கான தடையை நீக்க வழக்கு விசாரணை மாற்றம்

கள் விற்பனைக்கான தடையை நீக்க வழக்கு விசாரணை மாற்றம்

கள் விற்பனைக்கான தடையை நீக்க வழக்கு விசாரணை மாற்றம்

ADDED : ஜூன் 14, 2024 10:31 PM


Google News
Latest Tamil News
மதுரை: பனைமரங்களிலிருந்து கள் இறக்க, விற்பனை செய்ய தடையை நீக்க தாக்கலான வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட முதன்மை அமர்விற்கு மாற்றி தனி நீதிபதி உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நடராஜன் தாக்கல் செய்த மனு: பனைமரம் தமிழகத்தின் மாநில மரம். இது அழியும் நிலையில் உள்ளது. அதிலிருந்து கள் இறக்க தமிழக அரசு 1987ல் தடை விதித்தது தொடர்கிறது. இதனால் பனை தொழில் செய்வோர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பண்டைய தமிழர்கள் கள் குடித்து மகிழ்ந்தது பத்துப்பாட்டு, எட்டுத் தொகையில் இடம்பெற்றுள்ளது. கள் உடலுக்கு ஊட்டச்சத்து தரக்கூடியது. ஆந்திரா, கேரளாவில் கள் இறக்கி விற்க அம்மாநில அரசுகள் அனுமதித்துள்ளன. கலப்படம் செய்தால் தண்டனைக்குரிய குற்றம் என அறிவுறுத்தப்பட்டு உரிமம் வழங்கி, கள் கடை நடத்த அனுமதிக்கப்படுகிறது.

கேரளா போல் கள் கடை நடத்த தமிழகத்தில் புதிய சட்டம் இயற்றி, அனுமதிக்க வேண்டும். கலப்படம் செய்வோரை தண்டிப்பதன் மூலம் பனை மரங்கள் மற்றும் அதை நம்பியுள்ள தொழிலாளர்களை பாதுகாக்க முடியும். கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். கள் இறக்க, விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை முதன்மைச் செயலர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனர், புதுக்கோட்டை கலெக்டருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி சி.சரவணன்: இது பொதுநல வழக்கு. இரு நீதிபதிகள் கொண்ட முதன்மை அமர்வின் விசாரணைக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us