/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விழாக்களின் போது ரத்ததானம் செய்வோம்: இன்று (ஜூன் 14) ரத்தகொடையாளர்கள் தினம் விழாக்களின் போது ரத்ததானம் செய்வோம்: இன்று (ஜூன் 14) ரத்தகொடையாளர்கள் தினம்
விழாக்களின் போது ரத்ததானம் செய்வோம்: இன்று (ஜூன் 14) ரத்தகொடையாளர்கள் தினம்
விழாக்களின் போது ரத்ததானம் செய்வோம்: இன்று (ஜூன் 14) ரத்தகொடையாளர்கள் தினம்
விழாக்களின் போது ரத்ததானம் செய்வோம்: இன்று (ஜூன் 14) ரத்தகொடையாளர்கள் தினம்
ADDED : ஜூன் 14, 2024 06:50 AM

மதுரை : விழா, விசேஷங்களின் போது உணவு தானம் செய்வதைப் போல ரத்ததானம் செய்தால் விபத்து, மகப்பேறு நிகழ்வுகளில் ரத்தம் தேவைப்படும் எண்ணற்ற உயிர்களை காக்கலாம் என்கிறார் மதுரை அரசு மருத்துவமனை ரத்தவங்கி அலுவலர் டாக்டர் சிந்தா.
அவர் கூறியதாவது:
மதுரை அரசு மருத்துவமனை ரத்தவங்கியில் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை 28ஆயிரத்து 810 யூனிட் ரத்தம் பெற்றுள்ளோம். இந்தாண்டு ஜனவரி முதல் மே வரை 12ஆயிரம் யூனிட்கள் கிடைத்துள்ளது.
மிகவும் அதிகமாக கிடைப்பது ஓ பாசிடிவ் ரத்தவகை, அடுத்ததாக பி பாசிடிவ், ஏ பாசிடிவ் ரத்தம் கிடைக்கிறது. ஆனால் ஏபி நெகடிவ், பாம்பே ஓ குரூப் ரத்தவகை மிகவும் அரிதாக தான் கிடைக்கும்.
45 முதல் 55 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான மனிதர் 350 மில்லி, அதற்கு மேல் எடையுள்ளவர்கள் 450 மில்லி ரத்தம் தானமாக தரலாம். இங்கு அதிகபட்சமாக 350 மில்லி அளவு ரத்தம் எடுக்கப்படுகிறது.
ரத்தம் கொடுத்த 24 மணி நேரத்தில் 350 மில்லி அளவு நீர்ச்சத்து (பிளாஸ்மா) உடனடியாக உடலில் உற்பத்தியாகி விடும். 2 நாட்களில் வெள்ளைரத்த அணுக்களும் 8 வாரத்தில் சிவப்பு ரத்த அணுக்களும் உற்பத்தியாகி அதே அளவு ரத்தத்தை ஈடுகட்டி விடும். அதனால் தான் 12 வாரங்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம்.
மதுரை அரசு மருத்துவமனை ரத்தவங்கியில் தனிநபர்கள் காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை நேரடியாக வந்து ரத்த தானம் செய்யலாம். குடியிருப்போர் சங்கம், நலச்சங்கம், தொழில் நிறுவன ஊழியர்கள் குழுவாக ரத்ததானம் செய்ய விரும்பினால் அந்த வளாகத்திற்கு வந்து ரத்ததானம் பெறப்படும். அலைபேசி: 82489 23925 / 98948 10331ல் முன்பதிவு செய்ய வேண்டும் என்றார்.
ரத்ததான சேவையில் ஈடுபட்டு வரும் மதுரை ஜீவநதி அறக்கட்டளை தலைமை அறங்காவலர் கணேஷ்முருகன் கூறியதாவது: எங்கள் அறக்கட்டளையில் 1150 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தொடர்ந்து 25 ஆண்டுகளாக ரத்ததானம் செய்து வருகிறோம். இந்தாண்டு மே வரை முகாம் மூலமும் அவசரத் தேவைக்காகவும் 700 யூனிட்கள் ரத்ததானம் செய்துள்ளோம்.
இது இலவச சேவை என்பதால் மதுரையில் உள்ள எந்த மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளும் தொடர்பு கொள்ளலாம்.
ரத்தம் கேட்பவர்கள் 100 பேர் இருந்தால் ரத்தம் கொடுப்பவர்கள் 10 பேர் தான் உள்ளனர். ரத்த தானம் கேட்பவர்களையும் ரத்ததானத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ரத்தம் கொடுக்கச் செய்கிறோம் என்றார்.
45 முதல் 55 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான மனிதர் 350 மில்லி, அதற்கு மேல் எடையுள்ளவர்கள் 450 மில்லி ரத்தம் தானமாக தரலாம்.