/உள்ளூர் செய்திகள்/மதுரை/ செப்.14 வரை 'மக்களுடன் முதல்வர்' முகாம் செப்.14 வரை 'மக்களுடன் முதல்வர்' முகாம்
செப்.14 வரை 'மக்களுடன் முதல்வர்' முகாம்
செப்.14 வரை 'மக்களுடன் முதல்வர்' முகாம்
செப்.14 வரை 'மக்களுடன் முதல்வர்' முகாம்
ADDED : ஜூலை 21, 2024 05:06 AM
மதுரை; சமயநல்லுாரில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாமில் அமைச்சர் மூர்த்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அமைச்சர் கூறியதாவது: மாநகராட்சி 100 வார்டுகள், அதன் எல்லையை ஒட்டிய 24 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 97 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 38 ஆயிரத்து 441 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
ஊரகப்பகுதிகளுக்கு ஜூலை 11 ல் தொடங்கிய இத்திட்டத்தில் 395 ஊராட்சிகளில் 73 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
15 அரசுத்துறைகளைச் சேர்ந்த 44 சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. செப்.,14 வரை நடக்க உள்ள முகாமை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்றார். எம்.எல்.ஏ., வெங்கடேசன், டி.ஆர்.ஓ., சாலினி, மேற்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வீரராகவன் பங்கேற்றனர்.
கொட்டாம்பட்டி முகாமில் தாசில்தார்கள் முத்துபாண்டியன், லயனல் ராஜ்குமார், பி.டி.ஓ., க்கள் ஜெயபாலன், கார்த்திகேயினி, டி.எஸ்.ஓ., நாகராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 21 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மக்களிடம் இருந்து 303 மனுக்களை பெற்றனர்.