திருப்பரங்குன்றம்; மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தமிழ் உயராய்வு மையம் சார்பில் நித்தியானந்த சுவாமிலவாரு அறக்கட்டளை சொற்பொழிவு முதல்வர் ராமசுப்பையா தலைமையில் நடந்தது.
தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், உப தலைவர் ஜெயராம், உதவி செயலாளர் ராஜேந்திர பாபு, பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர்.
மாணவி சந்தியா வரவேற்றார். தமிழர் அறமும், மறமும் என்ற தலைப்பில் காமராஜ் பல்கலை பேராசிரியர் பழனிவேல் பேசினார். மாணவி ஸ்ரீ பிரியா நன்றி கூறினார்.