/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கால்வாயில் கொட்டும் கழிவுகளால் சீர்கேடு கால்வாயில் கொட்டும் கழிவுகளால் சீர்கேடு
கால்வாயில் கொட்டும் கழிவுகளால் சீர்கேடு
கால்வாயில் கொட்டும் கழிவுகளால் சீர்கேடு
கால்வாயில் கொட்டும் கழிவுகளால் சீர்கேடு
ADDED : ஜூன் 19, 2024 06:38 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் செல்லும் நிலையூர் கால்வாய்களில் பிளாஸ்டிக் உட்பட அனைத்து கழிவுகளும் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
நிலையூர் கால்வாய்க்குள் விளாச்சேரி, பாலசுப்பிரமணியம் நகர், திருநகர் ஏழாவது பஸ் ஸ்டாப் பகுதி, பாலாஜி நகர், சந்திராபாளையம், ஹார்விபட்டி பகுதிகளில் நிலையூர் கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விடப்படுகிறது.
மேலும் பிளாஸ்டிக் உட்பட அனைத்து விதமான திடக் கழிவுகளும் கொட்டப்படுகிறது.
இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார கேடு ஏற்பட்டு, கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோயைப் பரப்புகிறது. வைகை அணையில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கும்போது, நிலையூர் கால்வாய்க்குள் கிடக்கும் கழிவுகள் அடித்துச் செல்லப்பட்டு கண்மாய்களில் படிகிறது. இதன் தொடர்ச்சியாக கண்மாய் தண்ணீர்மூலம் நடக்கும் விவசாயமும் பாதிக்கிறது.
கால்வாயை ஒட்டிய பகுதியில் பல இடங்களில் குப்பை தொட்டிகள் இல்லை. சில இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைத்திருந்தாலும் பலர் குப்பைத் தொட்டிகளை பயன்படுத்துவதில்லை. நிலையூர் கால்வாய்க்குள் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை தேவை.