/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கழிவு நீர் கால்வாயாக மாறிய பெரியாறு பாசன கால்வாய் கழிவு நீர் கால்வாயாக மாறிய பெரியாறு பாசன கால்வாய்
கழிவு நீர் கால்வாயாக மாறிய பெரியாறு பாசன கால்வாய்
கழிவு நீர் கால்வாயாக மாறிய பெரியாறு பாசன கால்வாய்
கழிவு நீர் கால்வாயாக மாறிய பெரியாறு பாசன கால்வாய்
ADDED : ஜூன் 17, 2024 01:01 AM

மேலுார்: பெரியாறு கால்வாய் கரையின் இரு புறங்களிலும் உள்ள குடியிருப்புகள், நகராட்சி கட்டண கழிப்பறை கழிவு நீர் கால்வாயில் கலப்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
கள்ளந்திரி முதல் குறிச்சிபட்டி வரை பெரியாறு 12வது பிரதான கால்வாய் செல்கிறது. இதில் நொண்டிக்கோவில்பட்டியில் இருந்து கொட்டகுடி வரை 16 கி.மீ., தொலைவுக்கு பெரியாறு 6 வது பிரதான கால்வாய் செல்கிறது.
இக் கால்வாயில் வரும் தண்ணீரால் 48 கண்மாய்கள் நிறைந்து, ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயன்பெறுகிறது.
கால்வாயின் இரு கரைகளிலும் வசிப்போரில் சிலர் குப்பை மற்றும் கழிவு நீர் குழாய்களை கால்வாயினுள் இணைத்துள்ளனர். அதனால் இக் கால்வாயில் கழிவு நீர் நிரந்தரமாக தேங்கி கிடப்பதால் சுகாதாரம் என்பது சுத்தமாக கிடையாது.
விவசாயி ஸ்டாலின் கூறியதாவது: கரையின் இரு புறங்களிலும் வசிக்கும் பலர் செப்டிக் டேங்க் கட்டாமல் கழிவறை கழிவு நீரை பாசன கால்வாயில் வெளியேறுமாறு அமைத்துள்ளனர். நகராட்சியின் கட்டண கழிவறை தண்ணீரும் கால்வாயில் கலக்கிறது. அவை வறண்ட கால்வாயில் நிரந்தரமாக தேங்கி, துர்நாற்றம், சுகாதார கேடு என தொற்று நோய் அபாயம் நிலவுகிறது. கழிவு நீர் கலப்பதை தடுக்காவிட்டால், இதனால் விளைந்த பொருட்களும் தரமற்றதாகி விடும். கால்வாய்களை பராமரிக்க கோரிய உயர்நீதிமன்ற உத்தரவையும் அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டுள்ளனர் என்றார்.
செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், நகராட்சியுடன் இணைந்து கழிவு நீர் மற்றும் குப்பைகள் அகற்றப்படும் என்றார்.