/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சோழவந்தானில் அலறும் ஒலிபெருக்கிகளால் அவதி சோழவந்தானில் அலறும் ஒலிபெருக்கிகளால் அவதி
சோழவந்தானில் அலறும் ஒலிபெருக்கிகளால் அவதி
சோழவந்தானில் அலறும் ஒலிபெருக்கிகளால் அவதி
சோழவந்தானில் அலறும் ஒலிபெருக்கிகளால் அவதி
ADDED : ஜூன் 17, 2024 01:01 AM

சோழவந்தான்: வைகாசி திருவிழாவை முன்னிட்டு சோழவந்தான் வீதிகளில் அலறும் விளம்பரஒலிபெருக்கிகளால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இங்குள்ள ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 10ல் துவங்கி 17 நாட்கள் நடக்கிறது. இத்திருவிழாவையொட்டி தனியார் நிறுவனம் ஒலிபெருக்கிகள் மூலம் காலை 9:00 முதல் இரவு 8:00 மணி வரை இடைவிடாமல் அதிக சத்தத்தில் விளம்பரங்களை அலற விடுகிறது.
இதற்காக வட்ட பிள்ளையார் கோயில் துவங்கி பெரிய கடை வீதி மார்க்கெட் வீதிகளில் பள்ளிகள், மருத்துவமனைகள் அருகே ஸ்பீக்கர்கள், தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ குழாய்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக மாணவர்கள், முதியோர் பாதிக்கப்படுகின்றனர்.
சமூக ஆர்வலர் மாணிக்கமூர்த்தி: ஒலி பெருக்கிகள் அலறுவதால் சாலையில் நடப்போருக்கு வாகன சத்தம் கேட்பதில்லை. கடைகளில் வியாபாரம் செய்வோர் சிரமப்படுகின்றனர். புகார் அளித்தும் போலீசார் கண்டுகொள்ளவில்லை. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.