/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மின்வாரிய அதிகாரிகளின் தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் மக்கள் மின்வாரிய அதிகாரிகளின் தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் மக்கள்
மின்வாரிய அதிகாரிகளின் தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் மக்கள்
மின்வாரிய அதிகாரிகளின் தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் மக்கள்
மின்வாரிய அதிகாரிகளின் தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் மக்கள்
ADDED : ஜூன் 12, 2024 06:19 AM

மேலுார்: நாவினிப்பட்டியில் டிரான்ஸ்பார்மர் பழுது நீக்குவதற்காக விவசாயிகள் கொடுத்த பணத்தை அதிகாரிகள் பழுது நீக்க கொடுக்காமலும், தற்போது பயன்பாட்டில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்த மின் இணைப்புகளை துண்டித்ததால் மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர்.
நா. கோயில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் பெட்ரோல் பங்குக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி பழுது ஏற்பட்டதால், ஒரு மாதத்திற்கு முன்பு பழுதான டிரான்ஸ்பார்மருக்குப் பதில், அதேஇடத்தில் புதிதாக டிரான்ஸ்பார்மர் வைக்கப்பட்டது. நேற்று டிரான்ஸ்பார்மரை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் வரவே மக்கள் முற்றுகையிட்டனர்.
விவசாயி ராஜா கூறியதாவது: இங்கு பயன்பாட்டில் இருந்த டிரான்ஸ்பார்மரில் அதிக இணைப்புகள் கொடுத்ததால் கடந்த ஆண்டு மூன்று முறை பழுதானது. ஒவ்வொரு முறையும் பழுது நீக்க தலா ரூ.25 ஆயிரம் வீதம் கீழையூர் மின்அதிகாரிகளிடம் கொடுத்தோம்.
அவர்கள் மற்றொரு டிரான்ஸ்பார்மரை இங்கு வைத்து விட்டு, பழைய டிரான்ஸ்பார்மரை பழுது நீக்க எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் டிரான்ஸ்பார்மரில் இருந்த அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
இதையடுத்து பயன்பாட்டில் உள்ள இந்த டிரான்ஸ்பார்மரை அகற்ற வந்தனர். அந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு விசாரித்தோம். ஏற்கனவே பழுது நீக்குவதற்காக விவசாயிகள் கொடுத்த பணம் உரியவர்களுக்குப் போய் சேரவில்லை.
அதனால் அவர்கள் டிரான்ஸ்பார்மரை தர மறுக்கின்றனர். பயன்பாட்டில் உள்ள இந்த டிரான்ஸ்பார்மரை வாடகைக்கு வாங்கி வந்ததால் கழற்றப் போவதாகக் கூறினர்.
அதிகாரிகள் செய்த தவறுக்கு பொது மக்கள் தண்டனையை அனுபவிக்கிறோம்.
அதிகாரிகளின் முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என்றனர். மின்வாரிய உதவி இயக்குனர் சந்திரன் கூறுகையில், உடனே மின்சப்ளை கொடுக்கப்படும் என்றார்.