ADDED : ஜூன் 12, 2024 06:18 AM

மேலுார்: மேலுார் பூவாடை தொட்டிச்சி காளியம்மன் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மே 28 பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர்.
நேற்று நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்க பெற்ற பக்தர்கள் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து அலகு குத்தியும், பால்குடம், அக்னி சட்டி எடுத்தும் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் பூங்குழி இறங்கினர். தொடர்ந்து கிடா வெட்டி பொங்கல் வைக்கப்பட்டது. இன்று(ஜூன் 12) பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலமும், ஜூன் 13 மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.