/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சாக்கடை அடைப்பால் செல்லுார் மக்கள் அவதி சாக்கடை அடைப்பால் செல்லுார் மக்கள் அவதி
சாக்கடை அடைப்பால் செல்லுார் மக்கள் அவதி
சாக்கடை அடைப்பால் செல்லுார் மக்கள் அவதி
சாக்கடை அடைப்பால் செல்லுார் மக்கள் அவதி
ADDED : ஜூன் 03, 2024 03:25 AM

மதுரை: மதுரை செல்லுார் பகுதி மக்கள் பாதாள சாக்கடை அடைப்பால் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இங்கு 50அடி ரோடு, 60அடி ரோடு, அவ்வையார் தெரு, விவேகானந்தர் தெரு, ஜீவானந்தம் தெரு, சர்ச் தெரு, அய்யாவு தெரு, ஜூஸ் கடை தெரு, அய்யனார் கோயில் மெயின் ரோடு, அகிம்சாபுரம், செல்லுார் மார்க்கெட் பகுதிகள் உள்ளன.
எல்லா பகுதிகளிலும் தினமும் கழிவுநீர் ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: இருபது ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடைக்காக மாநகராட்சி சார்பில் சிறிய பைப்கள் அமைக்கப்பட்டது. தற்போது இப்பகுதியில் குடியிருப்புகள் பெருகிவிட்டதால் பைப்களில் மண் அடைத்துக் கொள்கிறது.
அதனை தோண்டி சரிசெய்தால் அதிக செலவாகும் என கருதும் மாநகராட்சி, ஒவ்வொரு வார்டிலும் 2 அல்லது மூன்று பேரை சாக்கடை அடைப்பெடுக்க நியமித்துள்ளனர்.
பாதாள சாக்கடை அடைப்பு, கழிவுநீர் தேக்கம் குறித்த புகார்களை அதிகாரிகளுக்கு அனுப்புகிறோம். அப்பகுதிக்கு காலையில் வந்து அடைப்பை எடுத்துவிட்டுச் செல்வர். சிறிய பைப்கள் என்பதால் மறுநாளே அடைப்பு ஏற்பட்டுவிடும்.
செல்லுார் மார்க்கெட் பகுதியில் எப்போதும் பாதாள சாக்கடை நிரம்பி ரோட்டில் ஆறாக ஓடிக்கொண்டிருக்கும். அதனை கடந்து செல்ல பெரிய கற்களை அதில் வைப்பதால் தடுக்கிவிழுகின்றனர் என்றனர்.