/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கருவேல மரம் வெட்டும் விவசாயக் கூலியாட்கள் கருவேல மரம் வெட்டும் விவசாயக் கூலியாட்கள்
கருவேல மரம் வெட்டும் விவசாயக் கூலியாட்கள்
கருவேல மரம் வெட்டும் விவசாயக் கூலியாட்கள்
கருவேல மரம் வெட்டும் விவசாயக் கூலியாட்கள்
ADDED : ஜூன் 03, 2024 03:25 AM
பேரையூர்: பேரையூர் பகுதியில் விவசாய பணிகள் இல்லாததால், கருவேல மரம் வெட்டும் பணியில் விவசாய கூலி ஆட்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பேரையூர் தாலுகாவில் டி.கல்லுப்பட்டி, சேடபட்டி ஒன்றியத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டட விவசாய கூலி தொழிலாளர்கள் உள்ளனர். விதை பாவுதல், பாத்தி கட்டுதல், நாற்று நடவு செய்தல், களை எடுத்தல், மருந்து தெளித்தல், கதிர் அறுத்தல் உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். காலப் போக்கில் இயந்திரங்களின் வருகை, போதிய மழையில்லை போன்றவற்றால் விவசாய கூலி தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். விவசாய கூலி வேலை இல்லாததால் 10 பேர் கொண்ட குழுவாக வேலிகருவேல மரங்களை வெட்டும் பணியில் ஈடுபடுகின்றனர்.
அவர்கள் கூறுகையில் ''விவசாயம் கைவிட்டதால் வேறு வழியின்றி கருவேல மரம் வெட்டும் பணியில் ஈடுபடுகிறோம். ஒரு டன் மரங்கள் வெட்டினால் ரூ.2000 சம்பளம் கிடைக்கும். 10 பேர் கொண்ட குழு தினமும் 2 முதல் 3 டன் வரை வெட்டுவோம். மழை காலங்களில் விறகு வெட்டுவது சிரமம் என்றனர்.