/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் ஆன்லைன் விபசாரம் தாய், மகன், புரோக்கர் கைது மதுரையில் ஆன்லைன் விபசாரம் தாய், மகன், புரோக்கர் கைது
மதுரையில் ஆன்லைன் விபசாரம் தாய், மகன், புரோக்கர் கைது
மதுரையில் ஆன்லைன் விபசாரம் தாய், மகன், புரோக்கர் கைது
மதுரையில் ஆன்லைன் விபசாரம் தாய், மகன், புரோக்கர் கைது
ADDED : ஜூலை 07, 2024 02:26 AM
மதுரை:ஆன்லைனில் தொடர்பு கொண்டு மதுரையில் விபசாரம் நடப்பதாக போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு புகார் வந்தது.
துணை கமிஷனர் குமார், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வினோதினி, ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமமாலா தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.
ஆன்லைன் விளம்பரத்தில் இருந்த மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்ட போது, மதுரை மாட்டுத்தாவணி அருகே டி.எம்., நகர் 4வது குறுக்கு தெருவுக்கு வருமாறு கூறினர்.
போலீஸ்காரர் ஒருவர் வாடிக்கையாளராக அங்கு சென்று, விபசாரம் நடப்பதை உறுதி செய்தார்.
தொடர்ந்து, ஜீவா, 24, அவரது 50 வயது தாய், 35 வயது பெண் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
எஸ்.ஐ.,யாக ஆர்வம்
போலீசார் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட ஜீவா, போலீஸ் எஸ்.ஐ.,யாக சேர முயற்சித்து வந்துள்ளார். ரெய்டின் போது வாடிக்கையாளர் போல் அவரை போனில் அழைத்தபோது 'ஜீவா ஐ.பி.எஸ்.,' என வந்ததால் 'ஷாக்' ஆனோம்.
அவரிடம் விசாரித்த போது போலீஸ் பணி மீதான ஆர்வத்தால் ட்ரூ காலரில் அப்படி வைத்துள்ளதாக தெரிவித்தார். நல்ல வருமானம் கிடைத்ததால் விபசார தொழில் செய்து வந்ததாக தெரிவித்தார்.
சில சமயம் தாயாரும் விபசாரத்தில் ஈடுபட அவரே வாடிக்கையாளரை அழைத்து வந்துள்ளார். ஆன்லைன் மூலம் இவர்களுக்கு வாடிக்கையாளர்களை 'லிங்க்' செய்யும் பிரவீன் என்பவரை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.