/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச மின்சாரத்திற்கு ரூ.3 லட்சம் விவசாயிகளுக்கு அதிகாரிகள் 'ஷாக்' * விவசாயிகளுக்கு 'ஷாக்' கொடுத்த அதிகாரிகள் இலவச மின்சாரத்திற்கு ரூ.3 லட்சம் விவசாயிகளுக்கு அதிகாரிகள் 'ஷாக்' * விவசாயிகளுக்கு 'ஷாக்' கொடுத்த அதிகாரிகள்
இலவச மின்சாரத்திற்கு ரூ.3 லட்சம் விவசாயிகளுக்கு அதிகாரிகள் 'ஷாக்' * விவசாயிகளுக்கு 'ஷாக்' கொடுத்த அதிகாரிகள்
இலவச மின்சாரத்திற்கு ரூ.3 லட்சம் விவசாயிகளுக்கு அதிகாரிகள் 'ஷாக்' * விவசாயிகளுக்கு 'ஷாக்' கொடுத்த அதிகாரிகள்
இலவச மின்சாரத்திற்கு ரூ.3 லட்சம் விவசாயிகளுக்கு அதிகாரிகள் 'ஷாக்' * விவசாயிகளுக்கு 'ஷாக்' கொடுத்த அதிகாரிகள்
ADDED : ஜூன் 20, 2024 02:11 AM

மேலுார்:மதுரை மாவட்டம் கீழையூரில் விவசாயிகளிடம் ரூ.3 லட்சம் பெற்றுக்கொண்டு இலவச மின் இணைப்பு கொடுத்த நிலையில், உரிய அனுமதி பெறவில்லை எனக்கூறி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மின்வாரியத்தில் தட்கல் திட்டத்தில் இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு ரூ.2.50 லட்சம் 'டிமாண்ட் டிராப்ட்' பெற்று மின் இணைப்பு கொடுக்கப்படுகிறது.
இதில் விண்ணப்பித்தோரிடம் கீழையூர் உதவி மின்பொறியாளர், போர்மென் ஆகியோர் அரசுக்கு செலுத்தவும், மின் இணைப்பு கொடுக்கவும் விவசாயிகளிடம் தலா ரூ. 3 லட்சம் பெற்றுக்கொண்டு கம்பங்கள் ஊன்றி, இணைப்பும் கொடுத்து சில ஆண்டுகளாகிறது. இந்நிலையில் தற்போது முறையான அனுமதி பெறவில்லை எனக்கூறி விவசாயிகளின் மின் இணைப்பை மின்வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள் துண்டித்தனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் கூறியதாவது:
தென்னரசு: தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்க அதிகாரிகள், அரசுக்கு செலுத்த ரூ 2.50 லட்சம், மின் இணைப்பிற்கு ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு 2 ஆண்டுகளுக்கு முன் மின் இணைப்பு கொடுத்தனர். அதிகாரிகள் செய்த தவறுக்கு தற்போது எங்களுக்கு தண்டனை கொடுத்துள்ளனர்.
ரவிச்சந்திரன்: மின்கம்பத்தை ஊன்றி மின் இணைப்பை விவசாயிகள் தன்னிச்சையாக கொடுக்க முடியுமா. அதிகாரிகள் தவறு செய்வது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளதால் உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மீண்டும் மின் இணைப்பை கொடுக்க வேண்டும்.
திருப்பதி: தவறு செய்த அதிகாரிகள் மீது அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தி தண்டனை வழங்குவதோடு அதிகாரிகளால் ஏமாற்றப்பட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பை வழங்க வேண்டும்.
மின்வாரிய மேற்பார்வை கண்காணிப்பாளர் மங்களநாதன் கூறுகையில், விசாரித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.