ADDED : ஜூன் 12, 2024 06:13 AM
மதுரை : மதுரையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடந்தது.
தேர்தல் அலுவலர்களாக மாநில துணைத் தலைவர் ஆலீஸ் ஷீலா, உதவி அலுவலர் ஜாகிர் உசேன் செயல்பட்டனர். துணைத் தலைவர் சண்முக சுந்தரம் முன்னிலை வகித்தார். மத்திய செயற்குழு உறுப்பினர் சசிகுமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் தண்டபாணி, பொதுச் செயலாளர் டி.கே.சிவகுமார் பங்கேற்றனர்.
சங்கத்தின் புதிய தலைவராக அ.இளங்கோ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காலியாக உள்ள துணைத்தலைவர் பதவிக்கு வே.இளங்கோ, ஜெயப்பிரகாஷ், ஜாகிர் உசேன், பிரபு, பழனிவேல்ராஜன், இணைச் செயலாளர்களாக ராஜ்குமார், ரத்தினவேல், சசிகுமாரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட அமைப்பு செயலாளர் பாலகுமார் நன்றி கூறினார்.