ADDED : ஜூலை 22, 2024 05:24 AM
விக்கிரமங்கலம்: விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டியில் மந்தை அம்மன் கோயில் விழாவை முன்னிட்டு வட மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் துவக்கி வைத்தார். மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 15 காளைகள் பங்கேற்றன. வடத்தில் பூட்டிய ஒரு காளைக்கு 20 நிமிடமும், அதனை அடக்க 8 வீரர்களும் போட்டியில் பங்கேற்றனர். காளைகளை அடக்க முயன்ற கீழமாத்துரர் பிரசாத் 22, கொடிமங்கலம் வேலு 22, உள்ளிட்ட 14 வீரர்கள் காயமடைந்தனர்.