/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் முன்னணி பல்கலைகளின் கல்விக் கண்காட்சி மதுரையில் முன்னணி பல்கலைகளின் கல்விக் கண்காட்சி
மதுரையில் முன்னணி பல்கலைகளின் கல்விக் கண்காட்சி
மதுரையில் முன்னணி பல்கலைகளின் கல்விக் கண்காட்சி
மதுரையில் முன்னணி பல்கலைகளின் கல்விக் கண்காட்சி
ADDED : ஜூலை 22, 2024 05:25 AM

மதுரை: மதுரையில் முதன்முறையாக 9 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இந்திய, வெளிநாட்டு முன்னணி பல்கலைகள் பங்குபெற்ற கல்விக் கண்காட்சி திருப்பாலை ஜெயின் வித்யாலயா பள்ளியில் நேற்று காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடந்தது.
மாணவர்களின் உயர்கல்வி குறித்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில், ஷிவ் நாடார் பல்கலை, அமிடி பல்கலை, சாய் பல்கலை, ஜின்டால் குளோபல் பல்கலை உள்பட 26 பல்கலைகள் பங்கேற்றன. இதனை ரோட்டரி மாவட்ட ஆளுனர் ராஜா கோவிந்தசாமி துவக்கி வைத்தார்.
திரளான மாணவர்கள் பெற்றோருடன் பங்கேற்றனர். உயர்கல்வியில் புதிய படிப்புகள் குறித்து பல்கலை ஸ்டால்களில் கேட்டு அறிந்தனர்.
பல்கலை பிரதிநிதிகள், கல்வி நிபுணர்களுடன் பல்துறை படிப்புகள், வெளிநாட்டு கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்து ஆலோசனை பெற்றனர். பங்கேற்பாளர்களுக்குகுலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட்டன.
காலையில் நடந்த கருத்தரங்கின் முதல் அமர்வில், ஆர்.வி. பல்கலை பிரதிநிதிகள், 'எதிர்கால வேலைவாய்ப்புகள்' பற்றியும், வி.ஐ.டி., பல்கலை பிரதி நிதிகள், 'இடைநிலை துறை, பல்துறைகளில் கல்வியின் முக்கியத்துவம்' குறித்தும், தப்பார் ஸ்கூல் ஆப் லிபெரல் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் பிரதிநிதிகள், 'இலக்கியம், கலாசார ஆய்வுகள், கதை சொல்லும் கலை' குறித்து பேசினர்.
இரண்டாம் அமர்வில், ஐகேட் டிசைன், மீடியா கல்லுாரி பிரதிநிதிகள், 'இந்தியாவில் வடிவமைப்பு, மீடியா கல்வி' குறித்தும், மாணிக்கம் ராமசுவாமி கலை அறிவியல் கல்லுாரி பிரதிநிதிகள், 'பள்ளிப் படிப்புக்கு பின் கல்லுாரிக் கல்வி' குறித்தும், வித்யாஷில்ப் பல்கலை பிரதிநிதிகள், 'தற்காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பப் படிப்புகள், வேலைவாய்ப்புகள்' குறித்து பேசினர்.
மதிய அமர்வில் அகமதாபாத் பல்கலை பிரதிநிதிகள் 'பணியின் எதிர்காலத்திற்கு இடைநிலைக் கற்றல் ஏன் முக்கியமானது' குறித்து விளக்கினர். ஆசிரியர்கள் சுகன்யா, அழகர்சாமி ஒருங்கிணைத்தனர்.
குஜராத்தி சேவா சமாஜ் கல்வி அறக்கட்டளைத் தலைவர் லால்ஜி வோரா, பள்ளித் தாளாளர் நிலேஷ் சங்கோயி, முதல்வர் விஜயகுமாரி, உறுப்பினர்கள் கவிதா சேடா, ஹேமல் லாலன், ஹாப்பின் லாலன், நிர்வாகத் தலைவர் ராஜேஷ் வோரா, அறக்கட்டளை உறுப்பினர் கைலாஷ் லாலன் கலந்து கொண்டனர்.