ADDED : ஜூன் 12, 2024 06:12 AM
தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி படிப்பு அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் வழியே நடத்தப்படுகிறது. இதில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 21ம் தேதி முதல் ஜூலை 9 வரையிலும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு 20ம் தேதி முதல் ஜூலை 8 வரையிலும் நடக்கிறது.
விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், இன்று முதல் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட் பதிவிறக்கலாம் என, அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் பதவியில், 1,768 காலியிடங்களை நிரப்ப, 23ம் தேதி நடப்பதாக இருந்தது. இந்தத் தேர்வு, நிர்வாக காரணங்களுக்காக, ஜூலை, 21க்கு தள்ளி வைக்கப்படுவதாக, ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்.