Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ லஞ்ச வழக்கில் 7 ஆண்டு சிறை

லஞ்ச வழக்கில் 7 ஆண்டு சிறை

லஞ்ச வழக்கில் 7 ஆண்டு சிறை

லஞ்ச வழக்கில் 7 ஆண்டு சிறை

ADDED : ஜூன் 12, 2024 06:12 AM


Google News
மதுரை : மேலூர் அருகே கம்பூர் காத்தம்மாள் தனது மகளுக்கு 2013ல் திருமணம் செய்து வைத்தார். தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம், 4 கிராம் தங்கம் வழங்கக் கோரி கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2014ல் விண்ணப்பித்தார்.

இதற்கு ஊர் நல அலுவலராக பணிபுரிந்த பூங்கோதை ரூ.1500 லஞ்சம் வாங்கியதால் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.2000 அபராதம் விதித்து மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us