ADDED : ஜூலை 08, 2024 06:25 AM
மதுரை : மதுரையில் கணியன் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஓய்வு பெற்ற ஏ.டி.ஜி.பி., செந்தாமரைக்கண்ணன் தலைமையில் நடந்தது. அகாடமி நிறுவனர் பழனிகுமார் வரவேற்றார்.
செந்தாமரைக்கண்ணன் பேசுகையில், தற்போது போட்டித் தேர்வுக்கு தயாராவதற்கு பல வழிகள் உள்ளன. தேவையான புத்தகங்கள் எளிதில் கிடைக்கின்றன. போலீஸ் துறை பொறுப்பு நிறைந்த துறை. பெண்கள் இத்துறையில் அதிகம் சாதிக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் போலீசில் வேலைவாங்கி தருகிறேன் என யார் அணுகினாலும் நம்பாதீர்கள் என்றார். 'உபன்யாஸ்' சரவணகுமார் ஏற்பாடு செய்தார்.