/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதிப்பெண் சான்றிதழ்கள் பல்கலையில் இழுத்தடிப்பு; மாணவர்கள் தவிப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் பல்கலையில் இழுத்தடிப்பு; மாணவர்கள் தவிப்பு
மதிப்பெண் சான்றிதழ்கள் பல்கலையில் இழுத்தடிப்பு; மாணவர்கள் தவிப்பு
மதிப்பெண் சான்றிதழ்கள் பல்கலையில் இழுத்தடிப்பு; மாணவர்கள் தவிப்பு
மதிப்பெண் சான்றிதழ்கள் பல்கலையில் இழுத்தடிப்பு; மாணவர்கள் தவிப்பு
ADDED : ஜூன் 04, 2024 06:24 AM
மதுரை : மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில் 2023 செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் உரிய நேரத்தில் வழங்காமல் இழுத்தடிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இப்பல்கலை இணைவிப்பு பெற்று மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் 109 கல்லுாரிகள் உள்ளன.
2023 ஏப்., பருவத் தேர்வுகள் எழுதிய கல்லுாரி மாணவர்களுக்கு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிட்டு, மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஆனால் 30க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் முழுமையாக தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை. மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பி.ஜி., படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாமலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாமலும் தவிக்கின்றனர்.
இதுகுறித்து விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவர்கள் சிலர் கூறியதாவது:
2023 ஏப்., தேர்வுக்கான 'ரிசல்ட்' தெரியவில்லை. மதிப்பெண் சான்றும் இதுவரை கிடைக்கவில்லை. பல்கலையில் சம்பந்தப்பட்ட தேர்வாணையர் அலுவலகம் சென்று கேட்டால் கல்லுாரி வழியாக தான் கேட்க வேண்டும் என்றனர். கல்லுாரி சார்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் விவரத்துடன் கடிதங்கள் அளித்தும் இன்னும் மதிப்பெண் சான்றிதழ் கிடைத்தபாடில்லை.
அலுவலர்களுக்கு 'ஒத்துழைக்காத' சில கல்லுாரிகளில் மாணவர்களின் 'ரிசல்ட்'க்கு பதில் 'வித்ெஹல்டு' என தேர்வு முடிவில் குறிப்பிட்டும், சான்றிதழ் வழங்காமல் இதுபோல் இழுத்தடிக்கப்படுகிறது எனவும் புகார் எழுந்துள்ளது.
இப்பல்கலையில் தற்போது துணைவேந்தர் இல்லை. கன்வீனர் கமிட்டியும் இல்லை. உயர் கல்வியில் சேர முடியாமல் மாணவர்களை பாதிக்கும் இப்பிரச்னைக்கு துறை செயலர் கார்த்திக் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.