/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்ஸ்பெக்டர் ஜாமின் மனு; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம் இன்ஸ்பெக்டர் ஜாமின் மனு; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
இன்ஸ்பெக்டர் ஜாமின் மனு; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
இன்ஸ்பெக்டர் ஜாமின் மனு; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
இன்ஸ்பெக்டர் ஜாமின் மனு; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
ADDED : ஜூன் 04, 2024 06:24 AM
மதுரை : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஒரு கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் சத்தியசீலா ஜாமின் கோரியதில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்துார் ராமர் 60. கட்டட தொழிலாளி. இவர் அதே பகுதி முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு மே 21 ல் சென்றார். அங்கு சிங்கம் சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராமரை சிலர் தாக்கினர். காயமடைந்த அவர் இறந்தார். சிலர் மீது ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர்.
இவ்வழக்கில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்த சத்தியஷீலாவை போலீசார் கைது செய்தனர். இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு: சம்பவத்திற்கும் மனுதாரருக்கும் தொடர்பில்லை. எப்.ஐ.ஆரில் மனுதாரர் பெயரை குறிப்பிடவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: மனுதாரர் ஏற்கனவே ஒரு வழக்கில் தொடர்புடையவர் என அரசு தரப்பு கூறுகிறது. ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் இன்ஸ்பெக்டர் ஜூன் 13 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.