ADDED : ஜூலை 10, 2024 04:44 AM
மதுரை : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மதுரையில் முதல், 2வது டிவிஷன் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.
மதுரை கே.எல்.என். பொறியியல் கல்லுாரி, நல்லமணி பள்ளியில் நடந்த 50 ஓவருக்கான முதல் டிவிஷன் லீக் போட்டி முடிவுகள்:
முதல் போட்டியில் ஸ்பார்க், ஒலிவா அணிகள் மோதின. ஸ்பார்க் அணி 47.4 ஓவர்களில் 180 ரன் எடுத்தது. விஜிகுமார் 44, பாலமுருகன் 43, நந்தகுமார் 31 ரன் எடுத்தனர். சரவணகுமார் 5 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய ஒலிவா அணி 30.4 ஓவர்களில் 120 ரன் எடுத்தது. விஜிகுமார் 4, நந்தகுமார் 3 விக்கெட் வீழ்த்தினார். ஸ்பார்க் அணி 60 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2வது போட்டியில் கிரசன்ட், விக்டரி அணிகள் மோதின. கிரசன்ட் அணி 196 ரன் எடுத்தது. பிரதீப் 42 ரன் எடுத்தார். விக்டரி அணி 46 ஓவர்களில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிவகுமார் 55 ரன் எடுத்தார்.
மதுரை டி.வி.எஸ். பள்ளி, சோலைமலை பொறியியல் கல்லுாரியில் நடந்த 30 ஓவர்களுக்கான 2வது டிவிஷன் லீக் கிரிக்கெட் போட்டி முடிவுகள்:
முதல் போட்டியில் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, செல்வம் அணிகள் மோதின. எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி 30 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது. சதீஷ்குமார் 85 ரன் எடுத்தார். ராதாகண்ணன் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய செல்வம் அணி 131 ரன் எடுத்தது. ஸ்ரீகார்த்திகேயன் 34, செல்வம் 33 ரன் எடுத்தனர். சரவணன் 3 விக்கெட் வீழ்த்தினார். எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2வது போட்டியில் திருநகர் ரெயின்போ, பெனடிக் அணிகள் மோதின. ரெயின்போ அணி 107 ரன் எடுத்தது. தீபன் 31 ரன் எடுத்தார். பிரணவ் ராம் 4 விக்கெட் வீழ்த்தினார். பெனடிக் அணி 13.4 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாலன் 75 ரன் எடுத்தார்.
3வது போட்டியில் ஓசன் லெவன், பாபு அகாடமி அணிகள் மோதின. ஓசன் லெவன் அணி 29.5 ஓவர்களில் 206 ரன் எடுத்தது. விஜய் மணி 61, மோனிஷ் 43 ரன் எடுத்தனர். நீதி 3 விக்கெட் வீழ்த்தினார். பாபு அணி 28.5 ஓவர்களில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. செல்வகுமார் 49, அனீஷ் பாலாஜி 49 ரன் எடுத்தனர். அர்ஜூன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
4வது போட்டியில் சூப்பர் சானிக், ரிச்சர்ட்ஸ் அணிகள் மோதின. சூப்பர் சானிக் அணி 26.3 ஓவர்களில் 166 ரன் எடுத்தது. வருண் 59, ஜெயகாந்த் 44 ரன் எடுத்தனர். விக்னேஸ்வரன் 4 விக்கெட் வீழ்த்தினார். ரிச்சர்ட்ஸ் அணி 25.4 ஓவர்களில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹரிஹரன் 52 ரன் எடுத்தார். ரிதன்குமார் 2 விக்கெட் வீழ்த்தினார்.