ADDED : ஜூன் 14, 2024 05:10 AM
மதுரை: தமிழ்நாடு மின்அமைப்பாளர்கள் சங்கத்தின் மதுரை மத்திய கிளை சார்பில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் விழா கூடலழகர் பெருமாள் கோயில் அருகே நடந்தது.
கிளைத் தலைவர் மாதவன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கிளைத் துணைத் தலைவர்கள் சதீஷ்கண்ணன், சுப்ரமணியன் வரவேற்றனர். சிறப்பு விருந்தினர்கள் இளைஞர் அணி செயலாளர் கருப்பசாமி, அமைப்புச் செயலாளர் யோகநாதன் பரிசு வழங்கினர். ஆண்டுதோறும் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, கல்லுாரி படிப்புக்கான செலவினங்களை சங்கம் ஏற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில கிளை செயலாளர் அபுதாகீர் ஏற்பாடு செய்தார். செயற்குழு உறுப்பினர் கோபி நன்றி கூறினார்.