/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குறைதீர் முகாமில் மண்ணெண்ணெய்யுடன் வந்த குடும்பத்தினர் குறைதீர் முகாமில் மண்ணெண்ணெய்யுடன் வந்த குடும்பத்தினர்
குறைதீர் முகாமில் மண்ணெண்ணெய்யுடன் வந்த குடும்பத்தினர்
குறைதீர் முகாமில் மண்ணெண்ணெய்யுடன் வந்த குடும்பத்தினர்
குறைதீர் முகாமில் மண்ணெண்ணெய்யுடன் வந்த குடும்பத்தினர்
ADDED : ஜூன் 25, 2024 06:10 AM
மதுரை : மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பாட்டிலில் மண்ணெண்ணெய்யுடன் வந்த குடும்பத்தினரை போலீசார் தடுத்து பறிமுதல் செய்தனர்.
கலெக்டர் சங்கீதா தலைமையில் இக்கூட்டம் நடந்தது. பாம்பு கடி, மின் விபத்து, நீரில் மூழ்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.7.50 லட்சம் மதிப்பிலான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
கடந்த வாரம் நடந்த ஜமாபந்தியில் பட்டாவுக்கு மனு அளித்த 30 பேருக்கு பட்டா ஆணை வழங்கினார். டி.ஆர்.ஓ. சக்திவேல், உதவி கலெக்டர் (பயிற்சி) வைஷ்ணவி பால், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று திருவள்ளுவர் சிலை முன்பாகவும், கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு எதிராகவும் வளாக வாசலிலும் தொடர் போராட்டங்கள் நடந்தன. குறைதீர் முகாமிற்கு வந்தவர்களை போலீசார் வழக்கமாக பரிசோதனை செய்தனர். நிலம் வழங்கக் கோரி பாட்டிலில் மண்ணெண்ணெய் உடன் வந்த ஒரு குடும்பத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பாட்டிலை பறிமுதல் செய்த பின் குறைதீர் கூட்டத்திற்கு அனுமதித்தனர்.