/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி துவக்கம் எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி துவக்கம்
எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி துவக்கம்
எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி துவக்கம்
எஸ்.எல்.சி.எஸ்., மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி துவக்கம்
ADDED : ஜூன் 25, 2024 06:10 AM
மதுரை : மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் (எஸ்.எல்.சி.எஸ்.,) மாணவர்களுக்கான 7 நாட்கள் புத்தாக்கப் பயிற்சி முகாம் முதல்வர் சுஜாதா தலைமையில் துவங்கியது.
டீன் பிரியா வரவேற்றார். துணை முதல்வர் குருபாஸ்கர் முன்னிலை வகித்தார். முதல்வர் பேசுகையில் மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து ஒழுக்கத்துடன் கல்வி கற்க வேண்டும். அப்போது தான் வாழ்வில் உயர்வான நிலையை அடைய முடியும் என்றார்.
விராலிமலை ஐ.டி.சி., யின் இ.எச்.எஸ்., தீ மற்றும் நிலைத்தன்மை தலைவர் ஸ்ரீகாந்த் பேசுகையில் கல்லுாரியில் படிக்கும் போதே மாணவர்கள் பன்முகத் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
மதுரை விநாயகா ஸ்கிரீன் மேலாண்மை இயக்குநர் ராமநாதன் பேசுகையில் மாணவர்கள் எந்த செயலையும் விருப்பத்துடனும் மேற்கொள்ள வேண்டும். விடாமுயற்சியால் தான் வெற்றியை அடைய முடியும் என்றார்.
துறைத் தலைவர்கள் கிஷோர்குமார், பத்மாவதி, விவேக் ராம்குமார், ரவிசங்கர் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடு செய்கின்றனர். முதல்நாள் நிகழ்ச்சியில் ஐ.கியூ.ஏ.சி., ஒருங்கிணைப்பாளர் சுகந்தி ஹெப்சிபா நன்றி கூறினார்.