/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அரசு மானியத்துடன் கடன்; தொழில் துவங்க அழைப்பு அரசு மானியத்துடன் கடன்; தொழில் துவங்க அழைப்பு
அரசு மானியத்துடன் கடன்; தொழில் துவங்க அழைப்பு
அரசு மானியத்துடன் கடன்; தொழில் துவங்க அழைப்பு
அரசு மானியத்துடன் கடன்; தொழில் துவங்க அழைப்பு
ADDED : ஜூன் 08, 2024 06:21 AM
மதுரை : மதுரை மடீட்சியாவில் அரசு மானிய கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைவர் லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார்.
மாவட்ட தொழிற்சாலை மைய புள்ளியியல் கணக்கெடுப்பு ஆய்வாளர் முகமது பரூக் பேசியதாவது:
அரசு உதவியோடு தொழில் துவங்க கடன் திட்டங்கள் உள்ளன. வர்த்தகம், உற்பத்தி, தொழிலுக்கு ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மானியமாக 25 சதவீதம், ரூ.3.25 லட்சம் அரசே வழங்கிவிடும்.
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் கடன் திட்டம் சர்வீஸ், உற்பத்தி இரண்டும் வரும்.
சர்வீஸ் லோனிற்கு ரூ.20 லட்சம், உற்பத்திக்கு ரூ. 50 லட்சம் வரை கடன் வழங்கப்படும். நகர்புறத்தில் தொழிலுக்கு 25 சதவீதம் மானியம், கிராமப்புறங்களில் 35 சதவீதம் வரை வழங்கப்படும். இத்திட்டத்திற்கு படிப்பு, வயது வரம்பு தேவையில்லை. மேலும் விபரங்களுக்கு www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம் என்றார்.