Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உளுந்து, பச்சைப்பயறு செடிகளில் நோய் மேலாண்மை

உளுந்து, பச்சைப்பயறு செடிகளில் நோய் மேலாண்மை

உளுந்து, பச்சைப்பயறு செடிகளில் நோய் மேலாண்மை

உளுந்து, பச்சைப்பயறு செடிகளில் நோய் மேலாண்மை

ADDED : ஜூன் 08, 2024 06:21 AM


Google News
மதுரை : 'உளுந்து, பச்சைப்பயறு செடிகளில் வேரழுகல் நோய் அறிகுறி தென்பட்டவுடன் நோயை கட்டுப்படுத்த வேண்டும்' என வேளாண்மை இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்தார்.

அவர் கூறியது: மேக்ரோபோமினா பேசியோலினா, ரைசாக்டோனியா பெட்டாட்டிகோலா பூஞ்சாணங்களால் உளுந்து மற்றும் பாசிப் பயறுகளில் வேரழுகல் நோய் உருவாகிறது. பகலில் அதிக வெப்பநிலை, நீண்ட நாட்கள் வறண்ட காலநிலையைத் தொடர்ந்து மழை பெய்யும் போது அல்லது பாசன நீர் கிடைக்கும் போது வேரழுகல் நோய் தாக்குதல் அதிகரிக்கும்.

இலைகள் மஞ்சளாகி வாடி உதிர்ந்துவிடும். தண்டின் அடிப்பாகத்தில் பழுப்பு நிறக்கோடுகள் தென்படும். தண்டின் பட்டைகள் அழுகி உரிந்துவிடும். பாதிப்பு ஏற்பட்ட ஒரே வாரத்தில் செடிகள் இறந்துவிடும். பாதித்த செடிகளை எளிதாக பிடுங்க முடியும். ஆனால் அழுகிய வேர்ப்பகுதிகள் மண்ணிற்குள் தங்கி விடும். தண்டு, வேர்களின் மேல் கருமைநிற பூஞ்சான இழை முடிச்சுகள் காணப்படும்.

மண் மற்றும் விதைகளில் தங்கியிருக்கும் இழை முடிச்சுகளின் மூலம் நோய் பரவும். பிக்னிடியோஸ்போர்ஸ் பூஞ்சான வித்துகள் காற்றின் மூலம் பரவும்.

மேலாண்மை செய்வதெப்படி


நிலத்தில் எக்டேருக்கு 12.5 கிலோ மட்கிய தொழுவுரம் இட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி, 10 கிராம் பேசிலஸ் சப்டிலிஸ், 2 கிராம் கார்பன்டசிம் ஏதாவது ஒன்றை கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

அடியுரமாக எக்டேருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட், 150 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட வேண்டும்.

நடவு செய்த 30ம் நாள் 25 கிலோ மட்கிய தொழுஉரம் அல்லது மணலுடன் 2.5 கிலோ டிரைகோடெர்மா விரிடி அல்லது பேசிலஸ் சப்டிலிஸ் கலந்து நீர் பாய்ச்ச வேண்டும். தேவையெனில் பாதித்த இடங்களில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் கார்பன்டசிம் மருந்தை கலந்து வேர்ப்பகுதியில் ஊற்றி வேரழுகல் நோயில் இருந்து பயிரை பாதுகாக்கலாம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us