Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நெல்லில் 110 நாட்கள் ரகம் போதும் மழைக்கு முன் அறுவடைக்கு யோசனை

நெல்லில் 110 நாட்கள் ரகம் போதும் மழைக்கு முன் அறுவடைக்கு யோசனை

நெல்லில் 110 நாட்கள் ரகம் போதும் மழைக்கு முன் அறுவடைக்கு யோசனை

நெல்லில் 110 நாட்கள் ரகம் போதும் மழைக்கு முன் அறுவடைக்கு யோசனை

ADDED : ஜூலை 09, 2024 05:25 AM


Google News
மதுரை: 'வைகை அணையில் கள்ளந்திரி முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துள்ள நிலையில், மழைக்காலத்திற்கு முன் அறுவடையாகும் வகையில் 110 நாட்கள் வயதுடைய நெல் ரகத்தை விவசாயிகள் தேர்வு செய்யலாம்' என வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் யோசனை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

வேளாண் விரிவாக்க மையங்களில் ஏ.டி.டி., 54, பி.பி.டி 5204, கோ 51, கோ 52, ஜெ.ஜி.எல். 1798, என்.எல்.ஆர். ஆர்.என்.ஆர். டி.கே.எம்.13 சன்ன ரகத்தில் 110 டன் நெல் விதைகள் இருப்பில் உள்ளன. மோட்டோ ரகத்தில் ஏ.எஸ்.டி. 16 ல் 7 டன் அளவு உள்ளது.

145 நாட்கள் வயதுடைய பாரம்பரிய விதைகளில் துாயமல்லி, பூங்கார் ரக விதைகள் இருப்பில் உள்ளன.

பாரம்பரிய அறுபதாம் குறுவை ரகம் 95 முதல் 110 நாட்கள் வயதுடையது. ஏ.எஸ்.டி., 16 மோட்டா ரகம், டி.கே.எம். 13, ஏ.டி.டி.54, ஆர்.என்.ஆர். ரகங்கள் 105 முதல் 110 நாட்கள் வயதுடையது.

நாற்று நடுவதாக இருந்தால் ஜூலை 25க்குள் நேரடி விதைப்பு முறையில் உடனடியாக சாகுபடியை தொடங்குவது நல்லது.

இந்த கணக்கீட்டின் படி சாகுபடி செய்தால் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதற்கு முன் அக். 2வது வாரத்தில் அறுவடை தொடங்கலாம்.

விதைக் கிராம திட்டத்தில் ஏக்கருக்கு தேவையான 20 கிலோ விதையை, கிலோ ரூ.17.50 மானியத்தில் பெறலாம். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 5 ஏக்கருக்கு மானியம் உண்டு. பாரம்பரிய ரகங்களுக்கு கிலோவுக்கு ரூ.25 மானியம் வழங்கப்படுகிறது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us