ADDED : ஜூலை 09, 2024 05:24 AM
மதுரை: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை செய்யப்பட்டார்.
இப்பிரச்னையில், பழங்குடி சமூகத்தின் குறிப்பிட்ட ஒருபிரிவினரை தொடர்புபடுத்தி பேசிய யுடியூபரை கைது செய்ய வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன் வனவேங்கைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில தலைவர் இரணியன், பொதுச் செயலாளர் உலகநாதன் உட்பட பலர் யுடியூபரின் உருவபொம்மையை எரித்தனர். போலீசார் 35 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.