/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கம்யூனிஸ்ட் யோக்கியதை இளங்கோவன் கிண்டல் கம்யூனிஸ்ட் யோக்கியதை இளங்கோவன் கிண்டல்
கம்யூனிஸ்ட் யோக்கியதை இளங்கோவன் கிண்டல்
கம்யூனிஸ்ட் யோக்கியதை இளங்கோவன் கிண்டல்
கம்யூனிஸ்ட் யோக்கியதை இளங்கோவன் கிண்டல்
ADDED : ஜூன் 30, 2024 06:53 AM
அவனியாபுரம், : ''கம்யூனிஸ்ட் யோக்கியதை என்ன என்பதை போன தேர்தலில் நாம் பார்த்தோம். வயநாட்டில் மீண்டும் மீண்டும் நின்று அவர்கள் ஏன் மூக்கு அறுபட வேண்டும்'' என காங்., இளங்கோவன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
ஏழை மக்கள் டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை அதிகமாக இருக்கிறது என்று நினைக்கும் காரணத்தால், கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் அவர்களை காப்பாற்ற முடியும். கள்ளுக்கடைகளை திறப்பது சாத்தியமா என தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
சிலர் நடிகர் விஜய்யுடன் சேர வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய முயற்சி எடுக்கிறார்கள். இதுவரை தனியாக நின்று நான் தோற்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று விஜய்க்கு, உள்அர்த்தத்தோடு பாராட்டுகள் தெரிவிக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்று என்னால் சரியாக சொல்ல முடியவில்லை.
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்காவை எதிர்த்து கம்யூனிஸ்ட்கள் தேவையில்லாமல் போட்டியிடுகிறார்கள். கம்யூனிஸ்ட் யோக்கியதை என்ன என்பதை போன தேர்தலில் நாம் பார்த்தோம்.
மீண்டும் மீண்டும் நின்று அவர்கள் ஏன் மூக்கு அறுபட வேண்டும். பிரியங்கா நிற்கிறார் என்றால் கம்யூனிஸ்ட் கட்சி பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். ஆனாலும் பிரியங்கா நான்கு லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.