/உள்ளூர் செய்திகள்/மதுரை/ காங்., ஆளும் மாநிலங்களில் பூரண மதுவிலக்கு அமல்; மாணிக்கம் தாகூர் காங்., ஆளும் மாநிலங்களில் பூரண மதுவிலக்கு அமல்; மாணிக்கம் தாகூர்
காங்., ஆளும் மாநிலங்களில் பூரண மதுவிலக்கு அமல்; மாணிக்கம் தாகூர்
காங்., ஆளும் மாநிலங்களில் பூரண மதுவிலக்கு அமல்; மாணிக்கம் தாகூர்
காங்., ஆளும் மாநிலங்களில் பூரண மதுவிலக்கு அமல்; மாணிக்கம் தாகூர்
ADDED : ஜூன் 30, 2024 07:30 AM

அவனியாபுரம் : ''தற்போது காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பூரண மதுவிலக்கு செயல்படுத்தப்படுகிறது'' என காங்., எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
கடந்த லோக்சபா கூட்டத் தொடரில் உறுப்பினர்கள் பேசும்போது எவ்வாறு மைக் துண்டிக்கப்பட்டதோ அதேபோல் தற்போதைய லோக்சபா கூட்டத்தொடரிலும் மைக் துண்டிக்கப்படுகிறது. லோக்சபாவில் பல்வேறு பிரச்னைகளை ஆக்கப்பூர்வமாக பேச வேண்டிய நிலையில் இந்த கலாசாரத்தை நிறுத்த வேண்டும். மதுரை விமான நிலைய டோல்கேட் மற்றும் அனைத்து சுங்க சாவடிகளிலும் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி, சாமானிய மக்களுக்கு எதிராக செயல்படுகிறது.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை எதிர்த்து, லோக்சபாவில் குரல் கொடுப்போம்.
பூரண மதுவிலக்கு என்பது மாநிலத்தின் வருவாய் பொறுத்ததே. 1967 க்கு முன் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பூரண மதுவிலக்கு இருந்தது. தற்போது காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பூரண மதுவிலக்கு செயல்படுத்தப்படுகிறது.
சாத்துாரில் பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் முழு முயற்சி எடுத்து வருகிறது.
பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியையும், கள்ளச்சாராய விபத்தில் இறந்தவர்களுக்கான நிதியையும் ஒப்பீடு செய்யக்கூடாது.
இது விபத்து, அது ஒரு துயர சம்பவம். அரசு பொதுவாக விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ. 4 லட்சம் வழங்கும் என்றார்.