/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆடி வரை ஆட்டம் தரும் காய்கறிகள் விலையை கேட்டால் 'ஆடி' போயிடுவீங்க... ஆடி வரை ஆட்டம் தரும் காய்கறிகள் விலையை கேட்டால் 'ஆடி' போயிடுவீங்க...
ஆடி வரை ஆட்டம் தரும் காய்கறிகள் விலையை கேட்டால் 'ஆடி' போயிடுவீங்க...
ஆடி வரை ஆட்டம் தரும் காய்கறிகள் விலையை கேட்டால் 'ஆடி' போயிடுவீங்க...
ஆடி வரை ஆட்டம் தரும் காய்கறிகள் விலையை கேட்டால் 'ஆடி' போயிடுவீங்க...
ADDED : ஜூன் 20, 2024 05:05 AM
மதுரை: மதுரையில் எந்த காய்கறி வாங்கினாலும் கிலோ ரூ.60 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது.
மாட்டுத்தாவணி மொத்த மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.130க்கு விற்பனையானது. கடந்த வாரம் வரை கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை இருந்த முருங்கை, தற்போது 2 மடங்காக அதிகரித்துள்ளது.
அவரை, பட்டர்பீன்ஸ், முருங்கைபீன்ஸ் உட்பட அனைத்து பீன்ஸ் வகைகளும் கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. மிளகாய் கிலோ ரூ.60க்கு கிடைக்கிறது. 3 நாட்களுக்கு முன் கிலோ ரூ.30 முதல் விற்கப்பட்ட தக்காளி தற்போது கிலோ ரூ.70 ஆக எகிறியது.
உள்ளூரில் தக்காளி வரத்து இல்லாத நிலையில் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் வரத்து குறைந்ததால் 15 கிலோ மூடை ரூ.900க்கு கிடைக்கிறது. இதனால் விலை அதிகரித்துள்ளது என்கிறார் மார்க்கெட் சங்க நிர்வாகி சின்னமாயன்.
அவர் கூறியதாவது: உள்ளூர், வெளியூர் காய்கறிகள் வித்தியாசமின்றி எல்லாமே கிலோ ரூ.60க்கு மேல் விற்கப்படுகிறது. தற்போது பழைய செடிகளில் இருந்து வரத்து குறைந்த நிலையில் காய்கறிகள் கிடைக்கிறது. புதிய செடிகளில் வரத்து கிடைக்க 30 முதல் 40 நாட்களாகும். ஆடி வரை காய்கறிகளின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றார்.