மனைவியை வெட்டிவிட்டு கணவர் தற்கொலை
மனைவியை வெட்டிவிட்டு கணவர் தற்கொலை
மனைவியை வெட்டிவிட்டு கணவர் தற்கொலை
ADDED : ஜூலை 09, 2024 06:41 AM

மதுரை மதுரையில் சந்தேகப்பட்டு மனைவி: வெட்டிய கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை செல்லுார் 50 அடி ரோட்டைச் சேர்ந்தவர் சம்சுதீன் 42. இவரது மனைவி சையதுஅலி பாத்திமா 38. ஏற்கனவே விவகாரத்தானவர்கள். சம்சுதீனுக்கு பாத்திமா 2வது மனைவி. பாத்திமாவுக்கு சம்சுதீன் 3வது கணவர். பாத்திமாவுக்கு ஒரு மகள் உள்ளார். நான்கு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்த சம்சுதீன், அடிக்கடி பாத்திமா மீது சந்தேகப்பட்டு நேற்றுமுன்தினம் இரவு அரிவாளால் வெட்டினார். தலை, கையில் காயம்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் பாத்திமா சேர்க்கப்பட்டார். சம்சுதீனை கைது செய்ய வீட்டிற்கு போலீசார் சென்றபோது அவர் எரிந்த நிலையில் கிடந்தார். கைதுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.