ADDED : ஜூன் 23, 2024 04:19 AM

திருநகர்: மதுரை திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் இன்ட்ரா கிளப் ஹாக்கி போட்டிகளை மதுரை டைல் வேர்ல்டு மரியம், டாக்டர் மெர்லின் துவக்கி வைத்தனர்.
முதல் போட்டியில் டிராகன் பாய்ஸ் அணியும் பேட்டில் வாரியர்ஸ் அணியும் மோதினர். இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர். இரண்டாவது போட்டியில் கோல் ஹண்டர்ஸ் அணி 2- - 1 என்ற கோல் வித்தியாசத்தில் ட்ரிபிளர்ஸ் அண்டு டாக்லர்ஸ் அணியை வென்றனர். இன்றும் போட்டிகள் நடக்கின்றன என கிளப் செயலாளர் ரமேஷ் தெரிவித்தார்.