Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 10 ஆயிரம் விவசாயிகள் வயலில் இலவச மண் பரிசோதனை

10 ஆயிரம் விவசாயிகள் வயலில் இலவச மண் பரிசோதனை

10 ஆயிரம் விவசாயிகள் வயலில் இலவச மண் பரிசோதனை

10 ஆயிரம் விவசாயிகள் வயலில் இலவச மண் பரிசோதனை

ADDED : ஜூன் 09, 2024 03:49 AM


Google News
மதுரை : வேளாண் துறை சார்பில் மதுரை மாவட்ட 13 வட்டாரங்களில் உள்ள 10 ஆயிரத்து 100 விவசாயிகளின் வயலில் இலவச மண் பரிசோதனை செய்யப்படுகிறது.

மண்ணின் தன்மைக்கேற்ற பயிரைத் தேர்ந்தெடுத்து மகசூல் பெறுவதற்கும் உரச் செலவை குறைப்பதற்கும் மண் பரிசோதனை அவசியம்.

மண்ணில் உள்ள உப்பின் நிலை, களர், அமில நிலை, சுண்ணாம்பு சத்துகளின் நிலை அறிந்து மண்ணை சரிசெய்தால் பயிரின் விளைச்சலும் மகசூலும் அதிகரிக்கும்.

இந்த மண் பரிசோதனைக்காக நிலத்தில் தரிசாக உள்ள 5 வெவ்வேறு இடங்களில் ஆங்கில எழுத்தின் 'வி' வடிவத்தில் நிலத்தை வெட்ட வேண்டும்.

மேல் மண்ணை அகற்றிய பின் குச்சியால் அல்லது கையால் 10 செ.மீ., ஆழத்திற்கு மண்ணை தோண்டி எடுத்து அதை நான்காக பிரிக்க வேண்டும்.

அதில் இரு பிரிவு மண்ணை அரைகிலோ அளவு எடுத்து பாலித்தீன் பையில் நிரப்பி பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். மொத்தம் அரைகிலோ அளவு இருக்க வேண்டும். வரப்பு பகுதி, நிழலான பகுதி, தண்ணீருள்ள பகுதியில் மண்ணை எடுக்கக்கூடாது.

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 8500 மண் மாதிரிகளும், மற்ற திட்டத்தின் கீழ் 1600 மண் மாதிரிகளும் இலவசமாக பரிசோதனை செய்ய மதுரையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

13 வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் இதன் மூலம் பயன்பெறலாம் என வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us