ADDED : ஜூன் 09, 2024 03:44 AM
கொட்டாம்பட்டி : - கொட்டாம்பட்டியில் ரூ.4.90 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நடக்கிறது. இப்பணியை ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பொன்னையா ஆய்வு செய்தார். மேலும் விரைந்து பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.
ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, பி.டி.ஓ., ஜெயபால், உதவி பொறியாளர் கணேசன் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உடனிருந்தனர்.