ADDED : மார் 12, 2025 06:14 AM
வாடிப்பட்டி; வாடிப்பட்டியில் விவசாயி குறைதீர் கூட்டம் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. மண்டல துணைத் தாசில்தார்கள் புவனேஸ்வரி, மவுன்ட்பேட்டன் முன்னிலை வகித்தனர். ஆர்.ஐ.ராஜா வரவேற்றார்.
வேளாண், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர்கள் பாண்டி, தாமரைச்செல்வி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய விவசாயிகள், கடைகளில் தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க வேண்டும். வயல், சாலையோரம் தாழ்வாக செல்லும் மின்ஒயர்களை சீரமைக்க வேண்டும். கச்சைகட்டி ரோடு கிரஷர்களில் துாசி வராமல் தடுப்புகள் அமைக்க வேண்டும்.
வலையபட்டி கல் குவாரிகளில் இருந்து மண், ஜல்லிகளை ஏற்றி தார்பாய் மூடாமல் வரும் லாரிகள் மீது நடவடிக்கை, அதிவேக லாரிகளால் ஆடு,மாடு பலியாவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.