/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கூம்பு வடிவ ஒலிபெருக்கி; தடுக்காமல் அலட்சியம் கூம்பு வடிவ ஒலிபெருக்கி; தடுக்காமல் அலட்சியம்
கூம்பு வடிவ ஒலிபெருக்கி; தடுக்காமல் அலட்சியம்
கூம்பு வடிவ ஒலிபெருக்கி; தடுக்காமல் அலட்சியம்
கூம்பு வடிவ ஒலிபெருக்கி; தடுக்காமல் அலட்சியம்
ADDED : மார் 12, 2025 06:12 AM
பாலமேடு; பாலமேடு வீதிகளில் தடை செய்த கூம்பு வடிவ ஓலி பெருக்கிகள் பயன்படுத்துவதை போலீசார் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பாலமேடு வட்டார கிராமங்களில் திருவிழாக்கள் துவங்கியுள்ளது. இவ்விழாக்கள், இல்ல விசேஷங்கள், இறப்பு, நாடகம், ஆடல் பாடல் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் என அனைத்திலும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அதிக இரைச்சல் சப்தம் காதுகளை துளைப்பதால் எரிச்சல், ரத்த அழுத்தம் என துாக்கம் போய் மனஉளைச்சலை ஏற்படுத்துகின்றன.
முன்பு கிராமங்களில் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது பாலமேட்டில் தாராளமாக பயன்படுத்துகின்றனர். இதன் சத்தத்தால் வாகன ஒலிப்பான் சத்தம் கேட்காமல் விபத்துகள் நடந்துள்ளது. தற்போது மாணவர்களுக்கு அரசுப் பொதுத் தேர்வு நடக்கிறது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.