ADDED : ஜூலை 19, 2024 05:54 AM
மதுரை: மதுரை மத்திய சிறையில் நெசவு ஆசிரியர், கொதி கலன் உதவியாளர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெண்கள் கிளைச் சிறையில் துாய்மைப் பணியாளர் பணியிடங்கள் தலா ஒன்று காலியாக உள்ளது. இப்பணியிடங்களில் நேரடி நியமனத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
துாய்மை பணியாளர் பணியிடத்திற்கு எம்.பி.சி., சீர்மரபினர் (பெண்கள் மட்டும்) இனச்சுழற்சி முறையிலும், இதர பணியிடங்களுக்கு பொதுப் போட்டி இனசுழற்சி முறையும் பின்பற்றப்படும். இப்பணிகளுக்கு குறைந்தபட்ச வயது 18. அதிகபட்சம் 32. பி.சி., எம்.பி.சி., வகுப்பினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் 2 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை உண்டு. முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பு கிடையாது.
நெசவு ஆசிரியர் பணிக்கு ேஹண்ட்லுாம் வீவிங் லோயர் கிரேடு தேர்ச்சி, கொதிகலன் உதவியாளர் பணிக்கு அதற்கான நேஷனல் அப்ரண்டிஷிப் சர்டிபிகேட் இன் டிரேட் ஆப் பாய்லர் அட்டெண்டன்ட் சான்றிதழில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். துாய்மைப் பணியாளருக்கு தமிழில் எழுதப்படிக்க தெரிந்தால் போதும்.
கல்வி, ஜாதி, பிற தகுதிச் சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை, 'சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை, மதுரை - 16' என்ற முகவரிக்கு ஆக.,16க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.