டாக்டர் கே.ஏ.கே. நுாற்றாண்டு விழா
டாக்டர் கே.ஏ.கே. நுாற்றாண்டு விழா
டாக்டர் கே.ஏ.கே. நுாற்றாண்டு விழா
ADDED : ஜூன் 23, 2024 04:04 AM
மதுரை: மதுரை மருத்துவக் கல்லுாரியில் இந்திய குழந்தை மருத்துவக் குழுமம் மதுரை கிளை சார்பில், குழந்தைகள் நல டாக்டர் கே.ஏ.கிருஷ்ணமூர்த்தி (கே.ஏ.கே) யின் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
டாக்டர் காமராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக டீன் தர்மராஜ் பங்கேற்றார். திருநெல்வேலி மருத்துவக் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் டாக்டர் நம்பியப்பன் விழா மலரை வெளியிட மதுரை அரசு மருத்துவமனை முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
குழந்தைகள் சுகாதார மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் நந்தினி குப்புசாமி, வழக்கறிஞர் நாகசுப்பிரமணியம், மருத்துவக்கல்லுாரி முன்னாள் பேராசிரியர் டாக்டர்கள் ராஜகோபால், சவுந்தரராஜன், தேனி மருத்துவக்கல்லுாரி டீன் பாலசங்கர்.
இந்திய குழந்தை மருத்துவக் குழும மதுரை சேப்டர் தலைவர் டாக்டர் ஜவஹர், டாக்டர் ராமசாமி, சென்னை குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராமானுஜம் உள்ளிட்டோர் டாக்டர் கே.ஏ.கே., குறித்த நினைவுகள், குழந்தைகள் நலப்பிரிவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை பகிர்ந்துக் கொண்டனர்.
டாக்டர் லதா வெங்கடேஷ் 'தேவதைகள் ஏன் கொடூரர்களாக மாறுகிறார்கள்' என்னும் தலைப்பில் அம்மாவின் அரவணைப்பு, அப்பாவின் அக்கறை, கூட்டுக் குடும்பமாக இருத்தல் உளவியல் ரீதியாக ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார். டாக்டர் மகாலிங்கம் நன்றி கூறினார்.